புரதம் நிறைந்த... வேர்க்கடலை....! - அரியத் தகவல்கள்......




சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் (நிலக்கடலை) தான் இருக்கிறது.

முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.

இந்த வேர்க்கடலை நமது உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்களை வழங்குகின்றது.

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.


கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது.

 வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன.

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.


வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்...!




கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும். மென்மையான பருத்தியால் செய்த உள்ளாடையை வாங்கி அணிய வேண்டும். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கப்படும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் தணிப்பு (பேடெட்) பிராவை தவிர்க்கவும்.

ஆலிவ் எண்ணெய் உபயோகம்

ஆலிவ் எண்ணெய்யை கொண்டு மார்பக காம்புகளை சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதற்கு சிறந்த வழியாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும். கர்ப்ப காலங்களில் காம்புகளின் மீது சோப்பு பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். மீறி அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும்.

அதனால் சோப்புக்கு பதிலாக மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் இது.இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந்தையில் விற்கப்படுகிறது. காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் மார்பக காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. இது காம்புகளில் ஏற்படும் வலியை நீக்கும். உங்கள் ஆடைக்கும் காம்புகளும் நடுவே முட்டு கட்டையாக இது விளங்கும்.

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியால் துடிக்கும் பெண்களுக்கு இது பெரிதும் உதவியாக விளங்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் மென்மையாக இருந்தால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அம்மாதிரியான நேரத்தில் ஐஸ் பேட் பயன்படுத்தினால் சற்று நிம்மதியாக இருக்கும். இதனால் காம்புகளில் ஏற்படும் வலி நீங்கி உங்களை ஆசுவாசப்படுத்தும்.

மார்பக பேட்:

மார்பக காம்புகளில் நீர்மம் ஒழுக ஆரம்பித்தால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இம்மாதிரி நேரத்தில் தரமுள்ள மார்பக பேட்களை பயன்படுத்த வேண்டும். தொற்றுக்களை தவிர்க்க மார்பக காம்புகளை ஈரமில்லாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

பெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்..?




முதலில் கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கவர்ச்சி என்பது ஆண்களைக் கவரக்கூடியது. இதை ஆங்கிலத்தில் sex appeal என்று கூறுவார்கள்.

அழகு என்பது அங்க உறுப்புகளின் அளவான தன்மையைப் பொருத்தது. அழகான ஒன்று கவர்ச்சியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறைவுதான். பொதுவாக பருவத்தில் எல்லாப் பெண்களுமே அழகு இல்லாதவர்கள்கூட- கவர்ச்சியாகவே இருப்பார்கள்.

காரணம் இளமை. எல்லாப் பெண்களும் அழகும், கவர்ச்சியும் உடையவர்களாக இருக்கவே ஆசைப்படுவார்கள். ஆகவே, அவர்கள் அழகு சாதனங்கள் மூலம் தன் அழகையும், கவர்ச்சியையும் கூட்ட முடியும் என்று நினைக்கிறார்கள்.

இது உண்மைதான். ஒரு 25 சதம் கவர்ச்சி உள்ள பெண் அழகு சாதனங்கள் மூலம் 75 சதம் கவர்ச்சியாகவும், அழகாகவும் தன்னைக் காட்டிக் கொள்ள முடியும்! ஆகவேதான், பெண்கள், பல தோற்றங்களில் தன்மை அழகுபடுத்திக் காட்டி, ஆண்களைச் சுலபமாகக் கவருகிறார்கள்! ஒரு பெண்ணால், எது இல்லாவிட்டாலும், அழகு சாதனங்கள் இல்லாமல் ஒருக்காலும் இருக்க முடியாது!

இன்று உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களும், கன்னிகாஸ்திரீயைப் போல,எந்த அழகு சாதனத்தையும் உபயோகிக்காமல் இருந்தால், உலகத்தில் உள்ள 75 சதம் வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வார்கள்! ஏன், ஜனப் பெருக்கம் கூட சுலபமாகக் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.

கண் நோய்யை குணமாக்கும் கோவைஇலை...!




கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும்.

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.

இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க:

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது.

கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்..?



உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

துவர்ப்பு:

உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

இனிப்பு:

மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு:

உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்:

பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு:

பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:

அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக்கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.

எப்போதும் உணவு உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக்கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.

நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

த்ரிஷாவின் தூண்டிலில் சிக்கினார் விஜயசேதுபதி...!




ஜெயம்ரவியுடன் த்ரிஷா நடித்துள்ள பூலோகம் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுடன் அவர் நடிக்கயிருந்த படமும் டிராப் ஆகி விட்டது. அதோடு கெளதம்மேனன் இயக்கத்தில அஜீத் நடிக்கும் படத்திலும் திரிஷா நடிக்கிற மாதிரி சொல்கிறார்கள். ஆனால் அதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில், இனி விஜய் அஜீத், சூர்யா, விக்ரம் போன்ற மேல்தட்டு ஹீரோக்கள் மீண்டும் தன்னுடன் இணைவது அத்தனை சுலபத்தில் நடக்கிற விசயமல்ல என்பதை புரிந்து கொண்ட த்ரிஷா, இப்போது வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் தனது அடுத்த ரவுண்டை அமோகமாக ஆரம்பிக்கவும் ரூட் போட்டு வருகிறார்.

குறிப்பாக, அவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக, அவர்களது நடிப்பு குறித்து பாசிட்டீவான விமர்சனங்களை கூறிவரும் த்ரிஷா, விஜயசேதுபதியை மட்டும் கொஞ்சம் ஓவராகவே விமர்சனம் செய்து வந்தார். அவரிடமுள்ள மைனஸ்களை தள்ளி வைத்து விட்டு, ப்ளஸ்களை மட்டுமே அவர் சொன்னதால், விஜயசேதுபதியும் த்ரிஷாவின் புகழ்ச்சிக்கு அடிமையாகி கிடந்தார்.

விளைவு, சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் விஜயசேதுபதி, அந்த படத்தின் கதையை கேட்டவர், இதில் த்ரிஷா நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்றொரு கருத்தை முன் வைத்துள்ளாராம். ஆனால் நலன் வேறொரு நடிகையை மனதில் வைத்திருந்தாராம். இருந்தாலும், விஜயசேதுபதி முன்கூட்டிய தனது மனதில் உள்ளதை கொட்டியதால், த்ரிஷாவின் பெயர் இப்போது பரிசீலணையில் உள்ளதாம்.

மஞ்சணத்தின்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு..?



கே‌ள்வி கேட்டா பல பேருக்கு பிடிக்காது. சரி நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். மஞ்சணத்தியோட இன்னொரு பெயர் நுணா. கிராமப்புறங்க‌ள்ல வாழுற மக்களுக்கு இது தெரிஞ்சிருக்கலாம். நான் சின்ன வயசுல இந்த மஞ்சணத்தி மரத்துல ஏறி விளையாடுவோம்.

 அதுல விளையுற காயை பறிச்சி ஒருத்தர் மேல ஒருத்தர் எறிஞ்சி விளையாடுவோம். அது பழமாயிட்டா கருப்பு நிறத்துல இருக்கும். நிறம் மட்டுமில்ல அதில இருந்து ஒருவித நாற்றம் வரும். எங்க ஊர்ல அதை கோழிப்பீ பழம்னு சொல்வோம்.

கோழியோட கழிவு மாதிரி இருக்கும், நாற்றமும்கூட அப்பிடித்தான் இருக்கும். அப்பிடி இருந்தாக்கூட நாங்க அதை சாப்பிடுவோம். கொஞ்சம்
புளிப்பு, கொஞ்சம் இனிப்பு சுவை இருக்கும். ஆனா இப்போ யார் அதை சீண்டுறாங்க, மரமே இல்லைங்கிறபோது காயா? பழமா? நுணாக்காயை ஊறுகா‌ய் செஞ்சி சாப்பிட்டா பொதுவா எல்லா நோயும் நீங்கி உடம்பு பலம் பெறும்.

நுணா இலைச்சாறு ஒரு பங்கு, உத்தாமணினு சொல்ற வேலிப்பருத்தி, நொச்சி, பொடுதலை இதுகளோட சாறு ஒரு பங்கு சேர்த்து 3, 4 வேளை கொடுத்துட்டு வந்தா எல்லாவிதமான மாந்தமும் ஓடிப்போயிரும்.

நுணாக்கா‌ய் & உப்பு சம அளவு எடுத்து அரைச்சி அடை மாதிரி தட்டி காய வச்சி அரைச்சு வச்சிக்கோங்க. இதை வச்சி பல் விளக்கிட்டு வந்தா பல்
பளிச்சினு இருக்கும்.

கூடவே பல்வலி, பல் அரணை வீக்கம், ரத்தக்கசிவு எல்லாம் ஓடிப்போயிரும். இதைவிட வேற பல்பொடி, பேஸ்ட் வேணுமா?

கோச்சடையான்-விமர்சனம்...!கோச்சடையான் - கோலோச்சுகிறான் - இன்னும் கோலோச்சுவான்!!




உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி அனிமேஷன் திரைப்படம், ஒருவழியாக தடை பல கடந்து, உலகமெங்கும் இன்று முதல் கோலோச்ச களம் இறங்கியுள்ளது!

கறுப்பு வெள்ளை காலத்தில், திரையுலகில் அடியெடுத்து வைத்து, ஈஸ்ட்மென் கலர், கலர் என்று பல ஆண்டுகளை கடந்து இன்று சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம் எனும் அனிமேஷன் உலகிலும் அதிரடியாக அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி, அத்தொழில்நுட்பத்தை தன் மகள் செளந்தர்யா ரஜினியின் இயக்கத்தின் மூலம் மிக பிரமாண்டமாக அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார்.


 திரையுலகின் மேற்கண்ட நான்காவது காலக்கட்டத்திலும், தன் கோச்சடையான் ஸ்டைலால் தனி முத்திரையை பதித்திருக்கும் ரஜினி, இப்படத்தில் கோச்சடையான், ராணா, சேனா என்று மூன்று முகங்களை காட்டி நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இனி கோச்சடையான் ரசிகர்கள் மனதில், வெற்றி சிம்மாசனம் போட்டு கோலோச்சும் விதம் குறித்து, கதை, களம் குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் பார்ப்போம்...

பல நூறு ஆண்டுகளாக அருகருகே இருக்கும் கோட்டைபட்டினம் நாட்டுக்கும், கலிங்காபுரி நாட்டுக்கும் பெரும் பகை. இருநாட்டு அரசர்களுக்கும் பரம்பரை பரம்பரையாக பெரும்பகை இருந்து வருகிறது... கோட்டைபட்டினம் நாட்டை சார்ந்த ராணா, சிறு வயதிலேயே, வீட்டை பிரிந்து காடு, மலை எல்லாம் கடந்து கலிங்காபுரிக்கு வந்து, தான் எந்த நாட்டை சார்ந்தவர் என்பதை காண்பித்து கொள்ளாமலேயே அந்த ஊர் அரசன் ஜாக்கி ஷெரப்பிற்கு, பெரியவனானதும் போர்படை தளபதியாகிறார். ஜாக்கியின் மகனும், இளவரசருமான ஆதியின் நட்பையும் பெறும் ராணா ரஜினி, தங்கள் கோட்டைபட்டினம் நாட்டு போர் கைதிகளை அடிமைகளாக பிடித்து வைத்திருக்கும் கலிங்காபுரி மன்னர் ஜாக்கியிடமிருந்தும், மகன் ஆதியிடமிருந்தும் காபந்து செய்ய வேண்டி அவர்களையே கலிங்காபுரி போர் வீரர்களாவும் ஆக்கி பெரும்படையுடன் கோட்டைபட்டினத்தின் மீது படை எடுக்க போகிறார் ராணா ரஜினி.


அவ்வாறு போன இடத்தில் கோட்டைபட்டினத்தின் இளவரசரும், தன் பால்ய சிநேகிதனுமான சரத்குமாரிடம், தான் இன்னார் என்பதை புரிய வைத்து., கோட்டைபட்டின வீரர்களை சொந்த நாட்டு போர்படையில் சேர்த்து, தானும் சேர்ந்து எஞ்சிய கலிங்காபுரி வீரர்களை மட்டும் கலிங்காபுரிக்கு ஓட விடுகிறார். இதற்கெல்லாம் காரணம், ராணா ரஜினியின் அப்பா, கோச்சடையான் ரஜினி, நயவஞ்சகமாக கோட்டைபட்டினம் அரசர், நாசரால் கொல்லப்பட்டதும், அவர் போட்டு சென்ற சபதமும் தான் என்று ப்ளாஷ்பேக் விரிகிறது...


அப்பா கோச்சடையான் ரஜினி விட்டு சென்ற பணியை மகன் ராணா ரஜினி எப்படி சிரமேற்கொண்டு முடிக்கிறார். தளபதி கோச்சடையான் புகழ் பிடிக்காமல் கோட்டைப்பட்டினம் மன்னர் நாசர் அவரை கொல்லத்துணியும் அளவு செய்த சதி என்ன? கலிங்காபுரி மன்னர் ஜாக்கிக்கும், கோச்சடையானின் சபதத்திற்கும் என்ன சம்பந்தம்? அந்த சபதத்தை ராணா ராஜினி எப்படி நிறைவேற்றுகிறார்? கோச்சடையானின் எதிரி, துரோகிகளை ராணா ரஜினி எப்படி பழிதீர்க்கிறார்? தீபிகா படுகோன் யார்?


 அவரை ராணா ரஜினி காதலித்து கைபிடிப்பது எப்படி? சரத்-ரஜினியின் பால்யகால சிநேகம், மாமன்-மச்சான் பந்தமாவது எப்படி? மூத்த மகன் சேனாவை மிஞ்சி கோச்சடையானின் இளைய மகன் ராணா வீரனாக திகழ்வது எப்படி? எனும் எண்ணற்ற கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், பிரமாண்டமாகவும், பில்டப்பாகவும் பதில் அளிக்கும் கோச்சடையான் படத்தின் க்ளைமாக்ஸில் வந்து சேரும் சேனா ரஜினி - ராணா ரஜினியின் மோதலை கோச்சடையான் பகுதி-2ல் பார்க்கலாம் என எதிர்பார்ப்பையும் கிளப்பி விட்டு படத்தை முடிக்கிறார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்.


ஹாலிவுட் படங்களுக்கு நிகரான சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம்(அதாங்க, அனிமேஷன்...) பிரமாண்ட செட்டுகள், பில்-டப்பான ஷாட்டுகள், ரஜினியின் ஸ்டைல் குதிரை சாகஸ என்ட்ரி, கப்பலில் குதிரையுடன் தாவி, தாவி ரஜினி போடும் சண்டைகள், மாறுவது ஒன்றே மாறதது, சூரியனுக்கு முன் எழு, சூரியனையே வெற்றி கொள்ளலாம், வாய்ப்புகள் அமையாது நாம் தான் அமைத்து கொள்ள வேண்டும்... உள்ளிட்ட பன்ச்கள், ஆன்மிக அவதாரங்கள், என சகலத்திலும் கோச்சடையான், ராணா என ரஜினி ஜொலித்திருக்கிறார்.


ரஜினிக்கு இணையாக, தீபிகா படுகோனும் ஆக்ஷ்னில் பொளந்து கட்டியிருக்கிறார். அனிமேஷன் என்பதையும் தாண்டி சிற்பமாக அற்புதமாக ஜொலித்திருக்கிறார் அம்மணி!


சரத்குமார், நாசர் ஜாக்கி ஷெரப், ஆதி, ஷோபனா உள்ளிட்ட எல்லோரும் பாத்திமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், வைரமுத்து - வாலியின் வரிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, வசனம், ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, ஆர்.மாதேஷின் கிரியேட்டிவ், ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் செளந்தர்யா பிரமாண்டமாக


கோச்சடையான் , சேனா, ராணா, செங்கோடகன், வீர மகேந்திரா, பீஜூ மகேந்திரா, ரிஷி கோடம் என அரசர் காலத்து பாத்திர பெயர்களுக்கே பெரிதும் யோசித்து இருப்பார்கள் போலும்... பேஷ், பேஷ்!


மலை மீது பிரமாண்ட அரண்மனைகள், அரங்குகள், அழகிய நீர்வீழ்ச்சிகள், இன்னும் இயற்கை எழில் மிகுந்த பகுதிகள், பிரமாண்ட காலற்படை, குதிரைபடை, யானைபடை என்று நம்மை அரசர் காலத்திற்கு கொண்டு சென்று விடுகிறார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்றால் மிகையல்ல.


லதா ரஜினிகாந்தின் பின்னணி குரலில், படத்தின் டைட்டில் கார்டு திரையில் ஓடும் போதே ஒரு பெப் தொற்றிக் கொள்கிறது. அது இந்தி நடிகர் அமிதாப்பின் முன்னோட்டம், கதை, களம் என தொடர்ந்து அது க்ளைமாக்ஸ் வரை நீங்காது இருப்பதில் கோச்சடையான் ஜெயித்திருக்கிறான்!


சிறியவர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.,
பெரியவர்களுக்கும் பிடிக்கும்... எனும் அளவில் இருக்கிறது கோச்சடையான்!


ஆகமொத்தத்தில், கோச்சடையான் - கோலோச்சுகிறான் - இன்னும் கோலோச்சுவான்!!

அல்சர் நோய்க்கு மருந்தாகும் பீட்ரூட்..! - எப்படி தெரியுமா..?




செக்கச் செவேல் சிவப்பு நிறத்துடன் நியை சத்துகளையும் கொண்ட காய், பீட்ரூட். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பெருமை பெற்றுத்திகழ்கிறது. பீட்ரூட்டின் சில மருத்துவப் பெயன்களை இங்கே பார்க்கலாம்..

•பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

•பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி சேர்த்துக் கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ, எரிச்சல், அரிப்பு மாறும்.

•தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத்தடவினால் தீப்புண், கொப்புளம் ஆகாமல் விரைவில் ஆறும்.

•பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும், பீட்ரூட் ரத்த சோகையைக் குணப்படுத்தும்.

•பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியைக் கூட்டும்.

•பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலமிச்சைச் சாற்றில் தோய்த்து உண்டு வர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

•பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வந்தால் அவை அனைத்தும் குணமாகும்.

24 வருடமாக முடங்கி கிடக்கும் அம்பேத்கர் படம்...!




திருவனந்தபுரம்: 24 வருடமாக திரைக்கு வராமல் முடங்கி கிடக்கிறது அம்பேத்கர் வாழ்க்கை சரித்திர படம். சட்ட மேதை அம்பேத்கர் வாழ்க்கை சரித்திர படம் மலையாளத்தில் உருவானது.

அம்பேத்கர் வேடத்தில் மம்முட்டி நடித்தார். 1990ம் ஆண்டு உருவான இப்படம் முடிந்து 24 வருடத்துக்கு மேல் ஆகியும் ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கிறது. ‘படத்தை ரிலீஸ் செய்யாமல் தடுத்து வைத்திருப்பது ஏன்? என்று மல்லுவுட் குணச்சித்திர நடிகர் இன்னசென்ட் கேள்வி எழுப்பி உள்ளார்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் சாலக்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். அவர் கூறியதாவது:1990ல் தயாரிக்கப்பட்ட அம்பேத்கர் படம் முடிவடைந்து 24 ஆண்டுகள் ஆகியும் ரிலீஸ் ஆகாமல் இருப்பது எதிர்பாராதது.

அப்போதைய மத்திய அரசு இப்படத்தை தயாரிக்க பெரும் தொகை ஒதுக்கி தந்தது. இவ்வளவு செலவில் உருவாக்கப்பட்ட படம் இன்னமும் ரிலீஸ் செய்யாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பது ஏன் என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது.

இப்படத்தை ரிலீஸ் செய்து கொண்டு வருவதற்காக நான் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு இன்னசென்ட் கூறினார்.

செருப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை...!




தேர்ந்தெடுக்கும் போது, அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.

செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து, நான்கைந்து அடி நடந்து பார்த்து, சரியானதாகவும், நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால் தான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது. விலை குறைந்த செருப்புகளை விட, விலை கூடுதல் என்றாலும், தரமான, பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும்.

தோல் செருப்புகளை, தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைத்தால், செருப்பின் ஆயுளும் குறையும், பாதங்களுக்கு பொருத்தம் இல்லாமல் அழகும் கெட்டு விடும். தரையில் வழுக்காமல், கிரிப் உள்ள செருப்புகளையே பயன்படுத்த வேண்டும். மேலும், அழுத்தம் இல்லாமலும், அதிக கனமாக இல்லாமலும், மிருதுவாகவும் செருப்பு இருக்க வேண்டும்.

மழைக்காலத்தில், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது. ஏனென்றால், அது நடக்கும்போது, வழுக்கி விடுவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்து விடும். வயதான பெண்கள், வாதநோய் ஏற்பட்டவர்களும், குளிரான
இடங்களிலும், ஈரத்தன்மைஉள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.

பொதுவாக பெண்களின் பாதங்கள் மென்மையானவை. ஆதலால், ஒருபோதும் இறுக்கமான செருப்புகளையோ, ஷூக்களையோ அணியக் கூடாது. அப்படி அணிந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

பிளாஸ்டிக் செருப்புகளை விட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும். மேலும், அதிக வியர்வையும் தோன்றும். எனவே, பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும், செருப்புகளையும், ஷூக்களையும் துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா? என பார்த்து அணிய வேண்டும். செருப்பு, ஷூக்களுக்கு அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும். இதனால், செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது, செருப்பில் இருக்கும் ஈரத் தன்மையும் நீங்கி விடும்.

உங்களுக்கு செருப்பு வாங்குவதற்காக, அளவை கொடுத்து, இன்னொருவரை அனுப்பாதீர். நீங்களே சென்று தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது.அடுத்தவர்களின் செருப்புகளை அணியக் கூடாது. இதனால், தோல் நோய் ஏற்படும். ரப்பர், பிளாஸ்டிக் செருப்புகளை அணியும் பெண்கள், அவற்றை தினமும் கழுவி சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.

அதிக நேரம் கணனி பார்ப்பவருக்கு ஏற்படும் கண் பிரச்சினையை போக்க சில டிப்ஸ்...!




கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில்,


இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.


அதென்ன ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம்.


 அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு… இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.

சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20 – 20 – 20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.


வறட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க’’ என்கிற டாக்டர் பிரவீன், கம்ப்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.


‘‘கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப்பார்வையும் இல்லாம கம்ப்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப்பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கு.


ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும்.


பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும். கம்ப்யூட்டருக்கு ‘ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்’ போடறதும் கண்களைப் பாதுகாக்கும்.  பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு,


 வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும். அந்தவயசுல வரக்கூடிய பிரச்னையா ஒதுக்காம, கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமுக்கும் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கிறது அவசியம்.’’

ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன..?




பெண்களின் ஓரினச்சேர்க்கையை லெஸ்பியனிஸம் என்கிறோம். ஆண்களின் ஓரிச்சேர்க்கையை கே என்கிறோம். இந்த இரண்டையும் சேர்த்து பொதுவாக ஹேமாசெக்ஸ் என்று கூறுகிறோம். வெகு காலத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கையானது மனிதர்களுக்கு மட்டுமான ஒரு விசித்திர மனமாற்றம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள்.

ஆனால் இப்போது இந்த ஓரினச்சேர்க்கை வண்டு, ஆடு, குரங்கு மாதிரியான பல்வேறு விலங்குகளில் காணப்படுவதால் இது வெறும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு அல்ல என்பது புரிய வந்துள்ளது. ஆக பல ஜீவராசிகளும் ஓரினச்சேர்க்கை புரிகின்றனவே...ஏன் என்றால் இதற்கு ஒரே ஒரு காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.

மரபணுக்கள், சிசு வளரும் போது கர்ப்பப் பையினுள் ஊறும் ரசாயனங்கள், குழந்தையின் மூளையில் ஊறும் ஹார்மோன்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம். இது தவிர வளர்ப்பு முறை, அனுபவம், வாழ்க்கை, கல்வி போன்ற பல காரணங்களும் பாலியல் நடத்தையை நிர்ணயிக்கின்றன. உதாரணத்திற்கு கருவில் இருக்கும் குழந்தையின் ஆண்பால், பெண்பால் மரபணுக்களின் எண்ணிக்கை மாறுவதால் பாலியல் தடுமாற்றங்கள் ஏற்படலாம்.

 அதுபோக மரபணு சரியாக இயங்கினாலும் அது உற்பத்தி செய்ய வேண்டிய ஆண் மற்-றும் பெண்பால் ரசாயனம் சரியாக இயங்காவிட்டாலும் இந்த பிரச்சனை வரலாம். இது எல்லாமே சரியாக அமைந்தும் சிறு வயதிலேயே ஓரினச்சேர்க்கை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் இதுவே பிடித்து போவதால் அதிலே ஈடுபடுகின்றனர்.

செக்ஸ் அடிமை (sexual addiction) என்றால் என்ன..?




குடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல், அன்றாட சொந்த வேலைகளைக்கூட செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம்.

 அது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஆண்களுக்கு இந்த குறைபாடு அதிகரிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஆண் ஆணுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுப்படுவதைக் காணமுடியும். கீழ்க்கண்ட செயல்பாடுகளைக் காண நேர்ந்தால், அது செக்ஸ் அடிமை என்ற நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.

*அடிக்கடி சுய இன்பம் காணுதல்

*பல்வேறு உறவுகள்

*எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்

*போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்

*எக்ஸிபிஸனிசம் எனப்படும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பைக் காட்டுவதில் ஆனந்தம் அடைதல்

*செக்ஸ் துன்புறுத்தல்

*கற்பழித்தல்

*அதிக பார்ட்னர்களை விரும்புதல்

இது போன்ற குறைபாடுகள் இருந்தால், உடனடியாகப் போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல் நலம், பணம், சமுதாயச் சிக்கல் ஏற்படுவது மட்டுமின்றி, காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம்.

அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதை மருத்துவச் சிகிச்சை, கவுன்சலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.

பொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிக குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் (satyriasis) என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்போமேனியா (nymphomania) என்று சொல்லுவார்கள்.

இந்த குறைபாட்டால் தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களைப் பயமுறுத்துகின்றன. எப்படியாயினும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புபவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது, செக்ஸில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து எந்த நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்

பெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ..?




விசேஷக் காரணம் என்று எதுவும் இல்லை. மனரீதியாக ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு நடைமுறையில் முக்கியமாக மெல்ல மெல்ல பாலியல் உணர்வு வெளிப்படுவதால், அவர்களால் மனதைப் பாடத்தில் ஒருமுகப்படுத்த முடிகிறது.

பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்கு அறிவுகூர்மை அதிகம். ஆனால் தொலைநோக்குப் பார்வை குறைவு.

அதேசமையம் ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு "உள்ளுணர்வு" ( intution) அதிகம்.

ஆண்களுக்குத் தொலைநோக்குப் பார்வையும், விசாலமான அறிவும், தைரியமும், மனம் மாற்றும் உடல் வலிமையையும் இருப்பதால், ஆண் இனம் மேலோங்கி நிற்கிறது.

இயற்கை,பொதுவாகப் பெண் இனத்திற்குத் தாய்மையைத்தான் வலியுறுத்துகிறது. அவர்களது உடலும், மனமும் அதை நோக்கியே செல்லும்.

தக்காளி அவல் - ஆரோக்கிய சமையல்...! உங்களுக்காக




தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்
தக்காளி - 1
பச்சைப் பட்டாணி - 1/2 கப் (வேகவைத்தது)
கேரட் - 1 சிறியது
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் வத்தல் - 3
பெருங்காயம் - 1 சிட்டிகை
மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
உளுத்தப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 மூடி

செய்முறை:

* அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

* பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.

* பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.

* எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கடலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.

* பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அதனுடன் பருப்பு, ஊறவைத்த அவலை சேர்த்து நன்கு கிளறவும். பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.

* சுவையான தக்காளி அவல் தயார்.

பிஸ்கெட் சாப்பிடுகிறிர்களா...? எச்சரிக்கை..!




குழந்தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக்கிறது. மேலும் பெரியவர்களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். பிஸ்கெட் சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது. குழந்தைகள் உயரமாக வளருவார்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது.

அது உண்மை இல்லை. பிஸ்கெட்டில் உடல் நலத்துக்கான கேடுகள் மறைந்து இருப்பதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘கான்சர்ட்’ என்ற நிறுவனம் சமீபத்தில் 34 பிரபல நிறுவனங்களின் பிஸ்கெட்டுகள் மற்றும் 25 நிறுவனங்கள் தயாரிக்கும் ஊறுகாய் போன்றவற்றை சேகரித்து ஆய்வு நடத்தியது. அவற்றில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் விதிகளின்படி பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதா? இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ள கொழுப்பு, புரோட்டீன், சர்க்கரை மற்றும் அமில அளவு சரியான அளவில் உள்ளதா? என ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரபிர தேசம், கேரளா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடந்த 7 மாதங்களாக பிஸ்கெட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இந்த ஆய்வு குறித்து கான்சர்ட் நிறுவனத்தின் இயக்குனர் சந்தனராஜன் கூறியதாவது:–

கிழங்குமாவு, கிரீம், உப்பு, பால் மற்றும் பேக்கரியில் இருந்து தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான அளவு சர்க்கரை உள்ளது. மேலும் அவை பல மாதங்கள் கெட்டுப் போகாமல் இருக்க உடலுக்கு தீமை விளைவிக்கும் ரசாயன கலவைகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகளில் ரசாயன கலவை குறைவாக உள்ளது. எனவே, பிஸ்கெட்டுகள் சாப்பிடுவதன் மூலம் உடலில் சக்தி, தெம்பு ஏற்படலாம்.

மாறாக உடலில் சத்துகள் உருவாகாது. பெரும்பாலான பிஸ்கெட்டுகளில் நார்ச்சத்து, தேன், கால்சியம் போன்றவை இல்லை. ஆனால், பிஸ்கெட் உணவுக்கு மாற்றானது. சுறுசுறுப்பு கொடுக்க கூடியது. பால், தேன் கலந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்கின்றன.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். புகையிலை பொருட்களை பயன் படுத்துவதால் மட்டும் புற்று நோய் வராது. நாம் சாப்பிடும் உணவு பொருட்களாலும் 30 சதவீதம் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

‘‘எலுமிச்சை, மாங்காய், காய்கறி கலவை மற்றும் மீன்’’ ஊறுகாய் வகைகள் பரிசோதனை செய்யப்பட்டன. பெரும்பாலான ஊறுகாய்களில் சோடியம் அதிக அளவில் உள்ளது. பென்ஷோயிக் அமிலமும் அதிக அளவில் சேர்க்கப் பட்டுள்ளது.

இனிப்பு வகை ஊறுகாய்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இது நுகர்வோருக்கு இருதய நோய்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும். அதிக உப்பு சத்து சேர்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த தகவலை இந்திய நுகர்வோர் சங்க தலைவர் ராஜன் தெரிவித்துள்ளார்.

உயிருக்கு உத்தரவாதமில்லாத உடனடி உணவுகள்....! - அதிர்ச்சி தகவல்...!




கடைகளில் விற்பனை செய்யப்படும் உடனடி உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய், இதயநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இன்ஸ்டன்ட் உணவு சாப்பிட்ட மாணவர்கள் பெரும்பாலோனோர் இதயநோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.


உடனடி உணவுகள்

சூப்பர்மார்க்கெட், மால்களில் உள்ள கடைகளில் பிரியாணி, சப்பாத்தி, புரோட்டா, இடியாப்பம், சட்னி, சாம்பார் உள்ளிட்ட பலவகை உணவு வகையராக்கள் பாக்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வந்து சூடு படுத்தினால் போதும் பத்து நிமிடத்திற்குள் உணவு தயாராகிவிடும். இந்த உடனடி உணவுகளை அதிகம் வாங்குவது வேலைக்கு போகும் இல்லத்தரசிகளும், வெளியூர்களில் ரூம் எடுத்து வேலைபார்க்கும், படிப்பவர்களும்தான்.


வசீகரிக்கும் விளம்பரங்கள்

மளிகைச் சாமான்களால் நிரம்பியிருந்த பலரது வீடுகளில் இன்றைக்கு இன்ஸ்டன்ட் உணவுப் பொருட்கள் நிரம்பியுள்ளன. இது தவறான செயல் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். சமைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் என்ற வசீகர விளம்பரத்தில் மயங்கும் பெண்களும், இளம் தலைமுறையினரும் நேரமின்மையினால் இந்த உடனடி உணவுகளை வாங்கி ருசிக்கின்றனர். விளைவு சிறு வயதிலேயே மூளை பாதிப்பு, இதயநோய், புற்றுநோய் என பல பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்

உடனடி உணவுகளில் மறைந்திருக்கும் முதல் ஆபத்து கொழுப்பு. ‘டிரான்ஸ்ஃபேட்’ என்று சொல்லக் கூடிய இது, உணவுப்பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க உதவும். இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து, அதன் விளைவாக இதய நோய்களுக்கு அஸ்திவாரம் போடும். குழந்தைப்பருவ பருமன், ஹைப்பர் டென்ஷன், மாரடைப்பு என பல நோய்களுக்கும் இது காரணமாகிறது என்று அதிர்ச்சியூட்டுகின்றனர் மருத்துவர்கள்.


சோடியம் உப்பு

உடனடி உணவுகளில் அதிக அளவு சோடியம் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். ஆரோக்கியமாக இருக்கிறவங்களுக்கே இது ஆபத்தானது. ஏற்கனவே இதயக் கோளாறு இருக்கிறவங்க இந்த உணவுகளை சாப்பிடறப்ப, பிரச்னை இன்னும் தீவிரமாகும்.


நம் உடம்பில் உள்ள நீர்ச்சத்தை சரிவிகிதத்துல வைக்கவும், தசைகள் சுருங்கி விரியவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும் சோடியம் தேவை. ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 மில்லி கிராம் அளவு சோடியம் போதுமானது. அந்த அளவைத் தாண்டும்போது ரத்த அழுத்தம் எகிறும். உடனடி உணவுகள்ல உப்பு அதிகமா சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த நோய் ஏற்படும் பாதிப்பு அதிகம்.

அதிக இனிப்பு பொருள்

பர்கர் பன், குளிர்பானங்கள், கெட்ச்சப் போன்ற பல உணவுகளில் இனிப்புச் சுவைக்காக சேர்க்கப்படற பிரதான பொருள் ‘ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்’. இது உணவுக்கு ஒருவித கவர்ச்சியான பிரவுன் நிறத்தையும் கொடுக்கக்கூடியது. இது, அதிகம் சாப்பிடத் தூண்டி, இதய நோய்களையும் நீரிழிவையும் வரவழைக்கக்கூடியது.
கெட்டுப்போகாமல் தடுப்பவை

உடனடி உணவுகள் கெடாமல் இருக்கவும், பாக்டீரியா வளராமல் இருக்கவும் சேர்க்கப்படும் ரசாயன பிரிசர்வேட்டிவ் ஆபத்தானது. உப்பு, சர்க்கரை, வினிகர் மாதிரியான இயற்கையான ப்ரிசர்வேட்டிவ்களால் பெரிய பாதிப்பு கிடையாது. ரசாயன பொருட்களான சோடியம் பென்ஸோயட்டுக்கு. ஊறுகாய், ஜூஸ் வகையறாக்களில் சேர்க்கப்படுவதால் இது அலர்ஜியை உருவாக்கி, மூளையையும் பாதிக்கலாம்.

அடுத்து உடனடியா சாப்பிடக் கூடிய அசைவ உணவுகளில் நைட்ரேட், நைட்ரைட்டஸ் சேர்க்கப்படுகிறது . இதனை தொடர்ந்து சாப்பிடும் போது வயிறு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயை வரவழைக்கக்கூடிய அளவுக்கு இது மோசமானது. ஏற்கனவே அசைவ உணவுகள்ல உள்ள கொழுப்பு, அதைக் கெடாம வச்சிருக்கறதுக்காக சேர்க்கிற இன்னொரு கொழுப்புன்னு ரெண்டுமே கெடுதல்தான் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.


அதிக கலோரி ஆபத்து

ரெடிமேட் உணவுகளில் கலோரி அதிகம் உள்ளது எனவே இவற்றை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவேளை இன்ஸ்டன்ட் உணவுகளை எடுத்துக் கொண்டால் , மற்ற நேரங்களில் நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், இதய நோய், உடல் பருமன் உள்ளவங்க இதைத் தொட்டுக்கூட பார்க்க வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கையாகும்

இரவில் பால் குடிக்கலாமா..? - இதோ உங்களுக்காக...!




டாக்டர்களில் சிலர் இரவில் பால் சாப்பிடலாம் என்கிறார்கள். இன்னும் சில டாக்டர்கள் இரவில் பால் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். எது சரி?

'இரவில் தூங்கச் செல்லும் முன்பு யார், யார் பால் சாப்பிடலாம், யார், யார் பால் சாப்பிடக்கூடாது என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன.

என்ன சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகமாட்டேங்குதே என்று வருத்தப்படுகிறவர்கள், இரவு தூங்கச் செல்லும் முன்பு தாராளமாக ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.

வளரும் குழந்தைகள் நல்ல உடல் வளர்ச்சி பெற இரவில் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.
பால் என்பது ஒரு வகையில் மயக்கத்தைக் கொடுக்கிற பானம். வயதானவர்கள் இரவில் சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம்.

ஆனால், உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள், உடல் இளைக்க வேண்டும் என்று நினக்கிறவர்கள், உடல் உழைப்பு நிறய செய்யாதவர்கள் இரவில் பால் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகள் ஸ்ரீதேவி, சரிகா, செலினா




திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பாலிவுட் நடிகைகள் யார், யார் என்று பார்ப்போம். பாலிவுட் நடிகைகளில் சிலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளனர். கர்ப்பம் தரித்ததால் அவர்கள் அவசர, அவசரமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்படி யார், யார் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானவர்கள் என்று பார்ப்போம்.

நம்ம சிவகாசி மயிலு ஸ்ரீதேவி பாலிவுட் சென்று இந்தி பட தயாரிப்பாளரான ஏற்கனவே திருமணமான போனி கபூரை காதலித்தார். அவர் போனி கபூரை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமானார். ஸ்ரீதேவி தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது அவர் 7 மாத கர்ப்பம்.

இந்தி நடிகை கொங்கனா சென் நடிகர் ரன்வீர் சோரேவை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமானார். அவருக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.

கமல் ஹாஸன் வாணி கணபதியின் கணவராக இருந்தபோது சரிகாவுக்கும் அவருக்கம் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் கழுத்தில் தாலி ஏறும் முன்பே சரிகா கர்ப்பமானார்.

நடிகை செலினா ஜேட்லி தனது காதலரான ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் ஹாகை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பம் தரித்தார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

கவர்ச்சி நடிகை வீணா மாலிக் கர்ப்பமானதால் தான் திடீர் என்று திருமணம் செய்து கொண்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் கிடாபூசாரி மகுடி




தமிழ் திரை விருட்சம் சார்பாக த.தமிழ்மணி தயாரிக்கும் முதல் படம் கிடாபூசாரி மகுடி. இப்படத்தில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம்தேவ் ஆகியோரும், நாயகியாக நட்சத்திராவும் நடிக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, வெவ்வாழை ராசு, போண்டா மணி, கலைராணி, கம்பம் மீனா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக ஜெயகுமார்.ஜெ அறிமுகமாகிறார். இவர் வேலு பிரபாகரன், ராம் கிரிஷ்மிர்லானி, வியாசன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் பழகுவது மட்டும் காதல் அல்ல, திருமணத்திற்கு பிறகு உருவாகும் ரத்த பந்தத்தில்தான் உண்மையான காதல் உள்ளது என்ற கருத்தை மையமாக கொண்ட இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், அரியலூர் மாவட்டம் மருங்கூர் குவாகம், தாமரைபூண்டி கிராம பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்க ராப் பாடகருக்கு ஊர்வசியை விற்பனை செய்த ஏ.ஆர்.ரஹ்மான்...!

 


அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்றா ராப் பாடகர் will.i.am alias William Adams. இவர் வெளியிடும் பாடல்களுக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு இருக்கும். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த will.i.am alias William Adams, கடந்த 1979ஆம் ஆண்டு பிறந்தவர். 39 வயதாகும் will.i.am alias William Adams, இதுவரை பாடகர், பாடலாசிரியர், கம்போசர், பாடல் ரிக்கார்டு தயாரிப்பாளர், பின்னணி குரல் கொடுப்பவர், ராப் பாடகர், தொழிலதிபர் என பலவித அவதாரங்கள் எடுத்துள்ளார்.

இவர் தற்போது தான் புதியதாக அமைத்துக்கொண்டிருக்கும் Birthday என்னும் ஆல்பத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் ஒன்றின் மெட்டில் ஒரு பாடல் பாட விரும்பியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் 90களில் கம்போஸ் செய்த பாடல்களை வரிசையாக கேட்டுக்கொண்டிருந்த will.i.am alias William Adamsக்கு இரண்டு பாடல்கள் மிகவும் கவர்ந்துவிட்டது. ஒன்று காதலன் படத்தில் இடம்பெற்ற பேட்டை ராப் என்ற பாடல், மற்றொன்று அதே படத்தில் இடம்பெற்ற ஊர்வசி ஊர்வசி என்ற பாடல்.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் அனுமதி பெற்று ஊர்வசி ஊர்வசி என்னும் பாடலை தனது ஆல்பத்தில் சேர்த்துவிட்டார் will.i.am alias William Adams. அதுமட்டுமின்றி Birthday ஆல்பத்திற்காக ஊர்வசி பாடலை ஆங்கிலத்தில் பாடல் எழுதவும், இணை கம்போஸாரக இருக்கவும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக ரஹ்மானுக்கு மிகப்பெரிய தொகை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதை ஏ.ஆர்.ரஹ்மானும் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். உலக அளவில் பிரபலமான ஒரு கம்போஸருடன் இணைந்து பணியாற்றுவதில் தான் பெருமைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்திய பாடி ஸ்பிரே விளம்பரம். டாப்சிக்கு குவியும் வாய்ப்புகள்...!




ஆடுகளம் படத்தில் அறிமுகமான நடிகை டாப்ஸி, பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்தார். ஆனால் தற்போது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் டாப்ஸி நடித்துக்கொண்டிருக்கும் ஒரே படம் முனி 3 மட்டுமே. ஆனால் பாலிவுட்டில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து பிசியாக இருக்கிறார்.

இந்தியில் தற்போது Running Shaadi‘ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து டாப்ஸியின் கவனம் திடீரென விளம்பர படங்களில் நடிப்பதில் திரும்பியுள்ளது. அதற்கு இவர் நடித்த ஒரு பாடி ஸ்பிரே விளம்பரம்தான் காரணம். இவர் நடித்த பாடி ஸ்பிரே விளம்பரம் ஒன்று வெளியான ஒரே நாளில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

பொதுவாக பாடி ஸ்பிரே விளம்பரங்களில் நடிக்கும் பெண்கள், பாடி ஸ்பிரே பயன்படுத்திய ஆணிடம் மயங்கி செல்வது போன்ற காட்சிகள்தான் இருக்கும். ஆனால் இந்த விளம்பரம் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் ரசித்து பார்ப்பதாக சர்வே கூறுகிறது.

வட இந்தியாவின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் இந்த விளம்பரம் வரும் நேரங்களில் மக்கள் வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை என கூறப்படுகிறது. இந்த விளம்பரம் வெளியான பிறகு டாப்சிக்கு அடுத்தடுத்து விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

பாபாஜியின் கிரியா யோகம்...! - உங்களுக்காக...




மாபெரும் சித்தர்களில் ஒருவரான பாபாஜி, பண்டைய பதினெண் சித்தர் மரபில் கற்பிக்கப்பட்ட யோக முறைகளைத் தொகுத்து அவற்றிலிருந்து கிரியா யோகத்திற்கு உயிரூட்டினார். அவர் வழிகாட்டிய கிரியா யோகமானது ‘கிரியாக்கள்’ எனப்படும் பல்வேறு பயிற்சிகளை 5 கிளைகளாகப் பிரித்து உட்கொண்டுள்ளது.

1. கிரியா ஹத யோகம்: உடலைத் தளர்த்திக் கொள்வதற்கான பயிற்சிகளான ஆசனங்கள், ‘பந்தங்கள்’ எனப்படும் தசைப்பூட்டுக்கள் மற்றும் உள-உடல் குறிகள்/அசைவுகளான முத்திரைகளை உள்ளடக்கியதுதான் கிரியா ஹத யோகம். இவற்றை பயிற்சி செய்வதன் மூலம் மிகுந்த ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை பெற முடியும். அத்தோடு, உடலில் உள்ள சக்தி மையங்களான சக்கரங்கள் மற்றும் சக்தியின் வழித்தடங்களான நாடிகளை எழுப்பவும் முடியும். பாபாஜி, மிகுந்த பயன் தரக்கூடிய குறிப்பிட்ட 18 ஆசனங்களை இதற்காக தேர்ந்தெடுத்தார். இவை பல்வேறு நிலைகளை உட்கொண்டு ஜோடிகளாகவும் கற்பிக்கப்படுகின்றது. நமது ஸ்தூல உடலை நாம் நமக்காகப் பேணாமல், இறைவனின் கோவிலுக்கான ஒரு வாகனமாகப் பேணிடல் வேண்டும்.

2. கிரியா குண்டலினி பிராணாயாமம்: இந்த சக்தி வாய்ந்த சுவாசப் பயிற்சியின் மூலம் ஒருவரது அபரிமிதமான சக்தி மற்றும் மேல்-மன விழிப்புணர்வை எழுப்பி தம் முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இருந்து உச்சந்தலை வரையுள்ள ஏழு முக்கியமான சக்கரங்கள் வழியாக பாய்ச்ச முடியும். இது ஒவ்வொரு சக்கரத்துடனும் தொடர்புடைய மறைந்திருக்கும் பேராற்றலை வெளி கொணர்ந்து ஐந்து கோசங்களிலும் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவராக ஒருவரை மாற்றுகிறது.

3. கிரியா தியான யோகம்: படிப்படியான நிலைகளாக அமைந்துள்ள இத்தொடர் தியானப் பயிற்சி நம் மனதைக் கட்டுக்குள் அடக்கி, நமது ஆழ் மனதை தூய்மை செய்வதற்கான ஒரு விஞ்ஞான பூர்வமான கலையாகும். இதன் மூலம் மனத்தெளிவு, மனதை ஒருநிலைப்படுத்தும் திறன், தொலைநோக்கு அறிவு மற்றும் படைப்பாற்றல் வளர்வதோடு மட்டுமல்லாது மூச்சற்ற நிலையில் இறைவனிடம் ஒன்றிடும் ‘சமாதி’ நிலையில் ஆன்ம அனுபவமும் பெற இயலும்.

4. கிரியா மந்திர யோகம்: அமைதியாக மனதிற்குள் ஜெபிக்கப்படும் மெல்லிய ஒலிகளின் மூலம் உள்ளுணர்வு, அறிவாற்றல் மற்றும் சக்கரங்களை எழுப்பலாம். ஒரு மந்திரமானது, ‘நான்’ எனும் எண்ணத்தைச் சார்ந்த மனதின் செயல்பாடுகளுக்கு ஒரு மாற்றம் தந்து அபரிமிதமான சக்தியினைச் சேமிக்க வழி செய்கின்றது. அதே நேரத்தில் ஆழ் மனதின் பழக்கங்கள் தூய்மையும் அடைகின்றது.

5. கிரியா பக்தி யோகம்: நமது ஆன்மாவினுள் இறை தேடலைப் பயிர் செய்தல். பக்தி சார்ந்த செயற்பாடுகள் மற்றும் தொண்டுகளின் மூலம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆன்மீக பரவசத்தை எழுப்பலாம். பக்தி பாடல்கள், சடங்கு-வழி வழிபாடு, தீர்த்த யாத்திரைகள் மற்றும் இறை வழிபாட்டின் மூலம் ஆண்டவனை அனைத்திலும் காண்பதினால் நமது செயல்கள் அனைத்திலும் இனிமை கலக்கிறது.

சேலத்தில் 500 கோச்சடையான் திருட்டு டி.வி.டி.க்கள் சிக்கியது...!




சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கோச்சடையான் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று வெளியிடப்பட்டது. படம் வெளியான 24 மணி நேரத்திலேயே அதன் திருட்டு டி.வி.டி.க்கள் சேலத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக ரசிகர் மன்றத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட தலைவர் பழனிவேல் மற்றும் ரஜினி ரசிகர்கள் சிலர் வீரபாண்டியார் நகர் ஆலமரக்காடு பகுதியில் ஒரு கேசட் கடையை கண்காணித்து கொண்டு இருந்தனர்.

அப்போது காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சில பண்டல்களை எடுத்து கொண்டு முதல் தளத்தில் உள்ள ஒரு கேசட் கடைக்கு கொண்டு சென்றனர். சந்தேகம் அடைந்த பழனிவேல் மற்ற நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அங்கு துணை தலைவர் சித்தேஸ்வரன், இணை செயலாளர் பாலகிருஷ்ணன், செயலாளர் தளபதிராம், ரஜினி பட்டதாரிகள் பேரவை ஆடிட்டர் சீனிவாச பெருமாள், முருகன், சுக்கம்பட்டி பிரபு உள்ளிட்ட ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் திரண்டு சென்று பார்த்த போது கடையில் பூபதி, மோகன் ஆகிய 2 பேர் இருந்தனர். அப்போது அவர்கள் அந்த பண்டல்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பண்டல்களில் 500–க்கும் மேற்பட்ட கோச்சடையான் திருட்டு டி.வி.டி. கேசட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவர்களிடம் எங்கு இருந்து இந்த கேசட்டுகள் வந்தது என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்து கொண்டே அவர்கள் நைசாக அங்கிருந்து சென்று விட்டனர்.

இதுப்பற்றி ரஜினி ரசிகர்கள் பள்ளப்பட்டி போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் ரசிகர்கள் கோச்சடையான் திருட்டு டி.வி.டி.க்களை ஒப்படைத்தனர். மேலும் இதே போல் சுவர்ணபுரி பகுதியிலும் ஒரு கடையில் கோச்சடையான் கேசட் விற்கப்படுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த கேசட்டுகளை அள்ளி சென்றனர். அந்த கடையையும் பூட்டினர். மேலும் இது தொடர்பாக ரஜினி ரசிகர் மன்றத்தினர் போலீசில் புகார் மனு கொடுத்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பழனிவேல் கூறியதாவது:–

மிக பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் தலைவர் ரஜினியின் கோச்சடையான் படம் வெளியான 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் திருட்டு டி.வி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக பல இடங்களில் ரசிகர்களிடம் இருந்து எனக்கு தகவல் கிடைத்தது. அதுவும் மோட்டார் சைக்கிள்களில் கொண்டு வரப்பட்டு கடைகளில் பதுக்கப்படுவதாகவும் கூறினர்.

இதையடுத்து நான் காலை 6 மணிக்கே இந்த பகுதியில் வந்து ஒரு கேசட் கடையை கண்காணித்து கொண்டு இருந்தேன். அப்போது மோட்டார் சைக்கிளில் பண்டல்கள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சென்று பார்த்த போது கோச்சடையான் திருட்டு கேசட் இருப்பது தெரியவந்தது. எனவே அதை பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளோம்.

இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்றும், இந்த கேசட்டுகள் எங்கிருந்து வந்தது என்றும் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும் - இதோ உங்களுக்காக...!




கத்தரிக்காய்

என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.

யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.



முருங்கைக்காய்

என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி.

யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.

யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.



மாங்காய்

என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ

யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.



அவரைக்காய்

என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.

யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.

பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.



அத்திக்காய்

என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.



பீர்க்கங்காய்

என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்

யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.

பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.



கோவைக்காய்

என்ன இருக்கு : விட்டமின் ஏ.

யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.

பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.



புடலங்காய்

என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.



பாகற்காய்

என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.

யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.

யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.

பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.



சுரைக்காய்

என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.

இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.

யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.

யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.

பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.



பூசணிக்காய்

என்ன இருக்கு: புரதம், கொழுப்பு

யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.

யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.

மருந்தில்லா மருத்துவம் ! ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் - உங்களுக்காக...!




வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.



சளிக் காய்ச்சல்

புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.



இருமல், தொண்டை கரகரப்பு

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.




சளி

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.



டான்சில்

வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.




வயிற்றுப் போக்கு

சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.




வாயுக் கோளாறு

மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.




நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.




தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.




தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.



தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.



வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்
நாற்றம் போகும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கு ஆலிவ் ஆயில்..!




இதன் சிறப்பம்சம் மோனோ சாச்சுரேடட் ஃபேட்டி அமிலம் (Mono Unsaturated Fatty Acid) சுருக்கமாக - MUFA) 72% என்ற அளவில் இருப்பது. மேலும் வைட்டமின் E அதிக அளவில் இருகிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL (Low-density lipoprotein லோ டென்சிடி லைபோபுரோடீன்) அளவை கார்டியா ரீஃபைன்ட் எண்ணை குறைக்கிறது. HDL(High-density lipoprotein ஹை டென்சிடி லைபோபுரோடீன்)என்னும் நன்மை செய்யும் கொழுப்பின் விகிதம் உடலில் அதிகரிக்கிறது.

ரத்த நாளங்களில் கொழுப்புப் படலம் படியாது. இதனால் இதயத்தின் தசைகளின் அழுத்தம் குறையும். சிரமப்பட்டு ரத்தத்தை இதயம் பம்ப் செய்யவேண்டி இருக்காது. ரத்தத்தின் அழுத்தமும் அதிகரிக்காமல் சீராக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகின்றன. மாரடைப்புக்கான சாத்தியங்களும் குறையும்.

வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றை உட்கிரகிக்க இந்த எண்ணெய் உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடென்டுகள் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை வெகுவாகக் குறைக்கின்றன.

சூரியனில் இருந்து வரும் தீமை விளைவிக்கும் கதிர்கள் தோலைக் கருப்பாகவும் தடிமனாகவும் மாற்றும். ஆனால் இந்த

ஆலிவ் எண்ணெய் தீமை செய்யும் கதிர்களின் பாதிப்பில் இருந்து தோலைக் காக்கிறது. கருமை நிறம் படிப்படியாகக் குறைந்து தோல் இயல்பு நிறத்துக்குத் திரும்பும்.தோல் மென்மையாகவும் இளமையாகவும் தோற்றம் அளிக்கும்.

தினந்தோறும் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு (28 கிராம்)ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால் நல்லது. அன்றாட சமையலில் அனைத்துப் பதார்த்தங்கள் தயாரிக்கவும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். வதக்குவது, பொறிப்பது, தாளிப்பது, பூரி செய்வது போன்றவற்றுடன் இட்லிப் பொடியைக் குழைத்துச் சாப்பிடுவதற்கும் ஏற்றது.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு...!




இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

தயிர் தரும் சுக வாழ்வு பற்றிய தகவல் - உங்களுக்காக...!




* தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன.

* தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும்.

* தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்.

* உடலில் வைட்டமின் ‘பி’ உறுஞ்சுவதற்கு- கிறகிப்பதற்கு தயிரிலுள்ள ‘பாக்டீரியாக்கள்’ ஊக்குவிக்கும்.

* தலையில் தயிர் கொண்டு ‘மஸாஜ்’ செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதுடன் தூக்கமும் நன்கு வரும்.

* சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை உள்ளவர்கள் கொழும்புச் சத்து உள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிரையோ அல்லது மோரையோ சாப்பிட்டுவர நோய்கள் நீங்கும்.

* குழந்தைகளுக்கு சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

* தயிர் கொண்டு தோல்களுக்கு ‘மஸாஜ்’ செய்வதென்றால் தோல் நுண்ணிய பகுதிகளிலுள்ள அழுக்குகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

* ஒரு கரண்டி தேன், மசித்த பப்பாளி இவற்றுடன் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.

* தயிருடன் தோடம்பழம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் முகத்தில் தடவி வரலாம்.

* நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தயிர் அதிக நன்மை பயக்கக் கூடியது.

* தூக்கமின்மையில்லாதோர் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவர்.

கோடைக்கு இதமளிக்கும் நுங்கு - தெரிந்து கொள்வோம்...!


நுங்கு..!


இயற்கை, நமக்கு கிடைத்த பொக்கிஷம். இயற்கை அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ப உணவு வகைகளை அளிப்பதில் ஆற்றல் மிக்கது. கோடைகாலம் வந்துவிட்டாலே நம் நினைவுக்கு வருவது நுங்குதான். நுங்கு கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தர்பூசணி, இளநீர், மோர் என்று பல கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தந்தாலும் நுங்குக்கு என்று தனிச் சிறப்பு பல உள்ளன.

எப்படி தென்னைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறதோ அது போல் பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறது. பனை மரத்தின் முற்றாத பனங்காயே நுங்கு ஆகும். இதற்கு என்று ஒரு பருவம் உள்ளது. இந்த பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவ நிலை கலந்த திண!மப் பொருள் மிகவும் இனிப்பாகவும், உண!பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண!டி சற்று முற்றிவிட்டால் இதன் சுவை குன்றிவிடும்.

பெண!பனையின் பாளையிலிருந்து இளம் பனங்காய்கள் உண!டாகும், இவை கொத்தாக குலைகளில் தோன்றும். இக்காய்கள் சில குறித்த மாதங்களிலேயே தோன்றும். இக் காய்கள் பொதுவாக மூன்று கண!கள் என்று அழைக்கப்படும் குழிகளைக் கொண!டிருக்கும். ஒரு சில காய்கள் இரண!டு கண!கள் கொண!டிருக்கும். பனங்காய்களை வெட்டி நுங்கை தனியாக எடுக்கலாம் அல்லது நுங்கை உறிஞ்சிக் குடிக்கலாம்.

நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், இரண!டு சதவீதம் புரதச் சத்தும் உள்ளன. மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்டீ காம்ப்ளக்ஸில் உள்ள தையாமின், ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

பாடல் :

'நீர்வார் வியர்க்குருவை நீக்குமன லாக்குந்தோற்
சார்வா மயஞ்சீதந் தானொழிக்குஞ் - சேர்வார்
விழிக்கரையாற் துஞ்சளிக்கு மென்சுரத மானே‚
கழிக்கரையாந் தாளியினங் காய்."

- அகத்தியர் குணபாடம்.

பொருள் :

பனையின் இளங்காயிலுள்ள நுங்கின் நீரானது வியர்வைக்குருவை (வேர்க்குரு) நீக்கும். பசியைத் தரும். தோலுடன் இருக்கும் நுங்கு சீதக்கழிச்சலைப் போக்கும். நுங்கு சாப்பிட்டால் சிறுநீர் நன்கு பிரியும். மேலும் இது உடலுக்கு பலத்தை கொடுக்கும்.

* நுங்கின் மேல் தோல் துவர்ப்பாக இருக்கும். அதனை நீக்கி விட்டு பலர் சாப்பிடுவர். அந்த மேல் தோல் துவர்ப்போடு சாப்பிட்டால் நுங்கு வயிற்றுப் புண!ணை குணமாக்கும்.

* அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண!களையும் ஆற்றும்.

* கோடையில் ஏற்படும் வேர்க்குரு நீங்க நுங்கை தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து வேர்க்குரு பட்டுப் போகும்.

* நுங்கை பால் மற்றும் தேனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நுங்கை சர்பத்தில் இட்டு சிலர் சாப்பிடுவர். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு சுவையான பானமாகவும் கருதப்படுகிறது.

* தாய்லாந்தில் பனை மரங்கள் அதிகம். அங்குள்ளவர்கள் நுங்கை எடுத்து பாட்டில்களில் பதப்படுத்தி உலகம் எங்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

நாமும் நுங்கின் பயனை உணர்ந்து கோடை காலத்தில் உண!டு நம் உஷ்ணத்தை குறைப்போம்.

அல்சர் அவதிக்கு விடிவு..! - இதோ இதைப்படிங்க...


அல்சர் அவதிக்கு விடிவு..!


இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.

புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.


காரணங்கள்:

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.


அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.



சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.



சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.



தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.


கடைப்பிடிக்க வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.

தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

கொலஸ்ட்ரால் இல்லாத சிக்கன் ரெசிபி சாப்பிட வேண்டுமா...!




 சிக்கன் ரெசிபியில் எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கன் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் இதில் எலுமிச்சை சேர்த்திருப்பதால், புளிப்பு சுவையும், மணம் தரும் வகையில் சீரகமும், இதர மசாலாப் பொருட்களையும் சேர்த்து செய்வதால், இதன் சுவைக்கு அளவே இருக்காது. இப்போது இந்த எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ (சற்று பெரிய துண்டுகளாக வெட்டியது)

சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

பூண்டு பொடி - 1 டீஸ்பூன்

வெங்காயப் பொடி - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வர மிளகாய் - 3 (அரைத்தது)

சிவப்பு குடைமிளகாய் - 1 டீஸ்பூன் (அரைத்தது)

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவி, தண்ணீரை முழுவதும் வடித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பௌலில் சீரகப் பொடி, அரைத்த வரமிளகாய், உப்பு, வெங்காயப் பொடி, பூண்டுப் பொடி மற்றும் சிவப்பு குடைமிளகாய் பொடி போன்றவற்றை போட்டு கலந்து, அதில் அந்த சிக்கனை போட்டு, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை விட்டு, பிரட்டி, இறுதியாக எலுமிச்சை சாற்றை விட்டு கிளறி, ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த சிக்கன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான எலுமிச்சை சீரக ரோஸ்டட் சிக்கன் ரெடி!!!

குறிப்பு:

பூண்டு மற்றும் வெங்காயப் பொடி கிடைக்காதவர்கள், வேண்டுமென்றால் பூண்டையும், வெங்காயத்தையும் அரைத்து சேர்க்கலாம்.

அழகு குறிப்புகள்:பெண்களின் வயிற்று சதை குறைய.....!




அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.

முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.


  • உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்
  • கிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்
  • கஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்
  • கோரை கிழங்கு பொடி - 100 கிராம்
  • உலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்


இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.

இந்த மருத்துவ முறையை வராமித்ரர் அங்கரசளைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.

குளியல் பொடி

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு - 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்

வெட்டி வேர் - 200 கிராம்

அகில் கட்டை - 200 கிராம்

சந்தனத் தூள் - 300 கிராம்

கார்போக அரிசி - 200 கிராம்

தும்மராஷ்டம் - 200 கிராம்

விலாமிச்சை - 200 கிராம்

கோரைக்கிழங்கு - 200 கிராம்

கோஷ்டம் - 200 கிராம்
 
ஏலரிசி - 200 கிராம்

பாசிப்பயறு - 500 கிராம்

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

பெண்களின் வயிற்று சதை குறைய

நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.

இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

மனிதர்களை நிர்வாணமாகக் காட்டும் ஐபோன் ஆப்ளிகேசன்..! அதிர்ச்சி வீடியோ...




என்ன உலகமடா இது, ஆள்பாதி ஆடை பாதி என்பார்கள் இப்போது இந்த ஐபோன் ஆப்ளிகேசனால் அந்தப் பழமெழிக்குப் பங்கம் வந்துவிடும் போல இருக்கின்றதே, அட ஆமாங்க ஐபோனில் உள்ள ஒரு ஆப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி ஐபோன் கமராவின் மூலம் அடுத்தவர்களை ஆடையில்லாமல் பார்க்கமுடிகின்றதாம்……

இந்தக் கானொளியைப் பார்க்கப் பார்க்க எங்களுக்கு அதிர்ச்சி தாங்கமுடியவில்லை என்றால்ப் பார்த்துக்கொள்ளுங்கள்,இக் கானொளியில் ஒருவர் தனது ஐபோனில் nomaoஎனப்படும் ஆப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி படம்பிடிக்க ஆரம்பிக்கின்றார், திரையைப் பார்த்தால்!!!! ஐயோ அங்கே தெரிபவர்கள் எல்லோரும் ஆடையில்லாமல் இருக்கின்றனர், போதாக்குறைக்கு ஸ்கூட்டரில வாறவன் கூட ஆடையில்லாமலே தெரிகிறான் என்றால்ப் பார்த்துக்கொள்ளுங்கள்,

அடக் கருமாந்திரமே தொழில்நுட்ப வளர்ச்சி என்று சொல்லி கடைசில நம்மள ஆதிவாசிகளாக்கிப்போட்டானுகளே படுபாவிங்க..

இப்படி உன்மையாகவே ஒரு ஆப்பிளிக்கேசன் இருப்பதாக எமக்கு ஒருதகவல் கிடைத்திருக்கின்றது ஆனால் அந்த அப்பிளிக்கேசன் இதுதானா என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது.

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு.....!




தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்....

படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங்கள் பெட்ரோல் போட்டுக்கொள்கிறீர்களா...?

உங்களுக்கான எச்சரிக்கை இது...

நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்...

இது போன்ற இடங்களில் மீட்டர் பெட்ரோல் நிரப்பும் நாசில் மீது இருக்கும்...

பெட்ரோல் நிரப்பும் நபர் உங்களிடம் எவ்வளவு என்று கேட்பார்...

நீங்கள் 100.00 ரூபாய் அல்லது 200.00 ரூபாய் என்று கூறுவீர்கள்...

மீட்டரில் இரண்டு வரிசைகளில் எண்கள் ஓடும்...

முதலில் உள்ளது லிட்டர் அளவு...

அதற்குக் கீழே உள்ளது தொகை...

பெட்ரோல் நிரப்பத் தொடங்குகையில் 0.0000 என்று இரண்டு வரிசைகளிலும் இருக்கும்...

நீங்கள் நூறு ரூபாய் என்று கூறினால்
பெட்ரோல் நிரப்பத் தொடங்கியதும்
லிட்டர் அளவு வருமிடத்தில் 1.0000 என்று வந்ததும் பெட்ரோல் நிரப்பும் நபர் நிறுத்தி விடுவார்...

நமக்கு அது ஒரு லிட்டர் என்பது தெரியாமல் நகர்ந்துவிடுவோம்...

அவ்வளவுதான் 100.00 ரூபாய்க்கு 30.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்பட்டுவிட்டது...

200.00 ரூபாய்க்கு 60.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்படும்...

நீங்கள் கூறும் 100.00-இன் மடங்குகளுக்கு ஏற்ப நீங்கள் ஏமாறும் தொகை 30.00-இன் மடங்குகளில் அதிகரிக்கும்...

ஏற்கனவே பெட்ரோல் விலை சுமை போதாதென்று இது வேறு...