ஆடுகளம் படத்தில் அறிமுகமான நடிகை டாப்ஸி, பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்தார். ஆனால் தற்போது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் டாப்ஸி நடித்துக்கொண்டிருக்கும் ஒரே படம் முனி 3 மட்டுமே. ஆனால் பாலிவுட்டில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து பிசியாக இருக்கிறார்.
இந்தியில் தற்போது Running Shaadi‘ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து டாப்ஸியின் கவனம் திடீரென விளம்பர படங்களில் நடிப்பதில் திரும்பியுள்ளது. அதற்கு இவர் நடித்த ஒரு பாடி ஸ்பிரே விளம்பரம்தான் காரணம். இவர் நடித்த பாடி ஸ்பிரே விளம்பரம் ஒன்று வெளியான ஒரே நாளில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
பொதுவாக பாடி ஸ்பிரே விளம்பரங்களில் நடிக்கும் பெண்கள், பாடி ஸ்பிரே பயன்படுத்திய ஆணிடம் மயங்கி செல்வது போன்ற காட்சிகள்தான் இருக்கும். ஆனால் இந்த விளம்பரம் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் ரசித்து பார்ப்பதாக சர்வே கூறுகிறது.
வட இந்தியாவின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் இந்த விளம்பரம் வரும் நேரங்களில் மக்கள் வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை என கூறப்படுகிறது. இந்த விளம்பரம் வெளியான பிறகு டாப்சிக்கு அடுத்தடுத்து விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.