கவர்னரையே பேஸ்புக்கில் கலாய்த்த பிரபல நடிகை..!



கவர்னரை பேஸ்புக்கில் கலாய்த்துள்ளார் ரீமா கல்லிங்கல். கேரள கவர்னராக இருந்த நிகில்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கேரளாவின் புதிய கவர்னராக ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வருகிற 12 அல்லது 13ம் திகதி கேரள கவர்னராக பொறுப்பேற்க உள்ளார்.

கேரளாவில் கவர்னர் பதவி வகிக்க ஆர்வமாக இருப்பதாகவும், கேரளாவில் தங்க இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

இவர் டெல்லி முதல்–மந்திரியாக இருந்து சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தோல்வி அடைந்தார்.

டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக நடந்ததே இவரது தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது.

டெல்லி பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது, பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் எதற்கு வெளியே செல்கிறார்கள் என்று ஷீலா தீட்சித் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்போது ஷீலா தீட்சித் கேரள கவர்னராக பதவி ஏற்க இருக்கும் நிலையில் அவரை பற்றி கேரள பிரமுகர்கள் பலரும் தங்களது பேஸ்புக்கில் பல்வேறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.

இதில், பிரபல நடிகை ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ள கருத்து கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள கவர்னராக பதவி ஏற்க ஷீலா தீட்சித் வருகிறார்... இனி கேரள பெண்கள் யாரும், மாலை 6 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது என்று தனது பேஸ்புக்கில் விமர்சித்துள்ளார்.