புரதம் நிறைந்த... வேர்க்கடலை....! - அரியத் தகவல்கள்......




சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் (நிலக்கடலை) தான் இருக்கிறது.

முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.

இந்த வேர்க்கடலை நமது உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்களை வழங்குகின்றது.

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.


கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது.

 வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன.

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.


வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்...!




கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும். மென்மையான பருத்தியால் செய்த உள்ளாடையை வாங்கி அணிய வேண்டும். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கப்படும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் தணிப்பு (பேடெட்) பிராவை தவிர்க்கவும்.

ஆலிவ் எண்ணெய் உபயோகம்

ஆலிவ் எண்ணெய்யை கொண்டு மார்பக காம்புகளை சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதற்கு சிறந்த வழியாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும். கர்ப்ப காலங்களில் காம்புகளின் மீது சோப்பு பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். மீறி அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும்.

அதனால் சோப்புக்கு பதிலாக மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் இது.இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந்தையில் விற்கப்படுகிறது. காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் மார்பக காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. இது காம்புகளில் ஏற்படும் வலியை நீக்கும். உங்கள் ஆடைக்கும் காம்புகளும் நடுவே முட்டு கட்டையாக இது விளங்கும்.

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியால் துடிக்கும் பெண்களுக்கு இது பெரிதும் உதவியாக விளங்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் மென்மையாக இருந்தால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அம்மாதிரியான நேரத்தில் ஐஸ் பேட் பயன்படுத்தினால் சற்று நிம்மதியாக இருக்கும். இதனால் காம்புகளில் ஏற்படும் வலி நீங்கி உங்களை ஆசுவாசப்படுத்தும்.

மார்பக பேட்:

மார்பக காம்புகளில் நீர்மம் ஒழுக ஆரம்பித்தால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இம்மாதிரி நேரத்தில் தரமுள்ள மார்பக பேட்களை பயன்படுத்த வேண்டும். தொற்றுக்களை தவிர்க்க மார்பக காம்புகளை ஈரமில்லாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

பெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்..?




முதலில் கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கவர்ச்சி என்பது ஆண்களைக் கவரக்கூடியது. இதை ஆங்கிலத்தில் sex appeal என்று கூறுவார்கள்.

அழகு என்பது அங்க உறுப்புகளின் அளவான தன்மையைப் பொருத்தது. அழகான ஒன்று கவர்ச்சியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறைவுதான். பொதுவாக பருவத்தில் எல்லாப் பெண்களுமே அழகு இல்லாதவர்கள்கூட- கவர்ச்சியாகவே இருப்பார்கள்.

காரணம் இளமை. எல்லாப் பெண்களும் அழகும், கவர்ச்சியும் உடையவர்களாக இருக்கவே ஆசைப்படுவார்கள். ஆகவே, அவர்கள் அழகு சாதனங்கள் மூலம் தன் அழகையும், கவர்ச்சியையும் கூட்ட முடியும் என்று நினைக்கிறார்கள்.

இது உண்மைதான். ஒரு 25 சதம் கவர்ச்சி உள்ள பெண் அழகு சாதனங்கள் மூலம் 75 சதம் கவர்ச்சியாகவும், அழகாகவும் தன்னைக் காட்டிக் கொள்ள முடியும்! ஆகவேதான், பெண்கள், பல தோற்றங்களில் தன்மை அழகுபடுத்திக் காட்டி, ஆண்களைச் சுலபமாகக் கவருகிறார்கள்! ஒரு பெண்ணால், எது இல்லாவிட்டாலும், அழகு சாதனங்கள் இல்லாமல் ஒருக்காலும் இருக்க முடியாது!

இன்று உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களும், கன்னிகாஸ்திரீயைப் போல,எந்த அழகு சாதனத்தையும் உபயோகிக்காமல் இருந்தால், உலகத்தில் உள்ள 75 சதம் வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வார்கள்! ஏன், ஜனப் பெருக்கம் கூட சுலபமாகக் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.

கண் நோய்யை குணமாக்கும் கோவைஇலை...!




கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும்.

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.

இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க:

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது.

கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்..?



உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

துவர்ப்பு:

உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

இனிப்பு:

மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு:

உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்:

பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு:

பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:

அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக்கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.

எப்போதும் உணவு உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக்கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.

நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

த்ரிஷாவின் தூண்டிலில் சிக்கினார் விஜயசேதுபதி...!




ஜெயம்ரவியுடன் த்ரிஷா நடித்துள்ள பூலோகம் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுடன் அவர் நடிக்கயிருந்த படமும் டிராப் ஆகி விட்டது. அதோடு கெளதம்மேனன் இயக்கத்தில அஜீத் நடிக்கும் படத்திலும் திரிஷா நடிக்கிற மாதிரி சொல்கிறார்கள். ஆனால் அதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில், இனி விஜய் அஜீத், சூர்யா, விக்ரம் போன்ற மேல்தட்டு ஹீரோக்கள் மீண்டும் தன்னுடன் இணைவது அத்தனை சுலபத்தில் நடக்கிற விசயமல்ல என்பதை புரிந்து கொண்ட த்ரிஷா, இப்போது வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் தனது அடுத்த ரவுண்டை அமோகமாக ஆரம்பிக்கவும் ரூட் போட்டு வருகிறார்.

குறிப்பாக, அவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக, அவர்களது நடிப்பு குறித்து பாசிட்டீவான விமர்சனங்களை கூறிவரும் த்ரிஷா, விஜயசேதுபதியை மட்டும் கொஞ்சம் ஓவராகவே விமர்சனம் செய்து வந்தார். அவரிடமுள்ள மைனஸ்களை தள்ளி வைத்து விட்டு, ப்ளஸ்களை மட்டுமே அவர் சொன்னதால், விஜயசேதுபதியும் த்ரிஷாவின் புகழ்ச்சிக்கு அடிமையாகி கிடந்தார்.

விளைவு, சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் விஜயசேதுபதி, அந்த படத்தின் கதையை கேட்டவர், இதில் த்ரிஷா நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்றொரு கருத்தை முன் வைத்துள்ளாராம். ஆனால் நலன் வேறொரு நடிகையை மனதில் வைத்திருந்தாராம். இருந்தாலும், விஜயசேதுபதி முன்கூட்டிய தனது மனதில் உள்ளதை கொட்டியதால், த்ரிஷாவின் பெயர் இப்போது பரிசீலணையில் உள்ளதாம்.

மஞ்சணத்தின்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு..?



கே‌ள்வி கேட்டா பல பேருக்கு பிடிக்காது. சரி நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். மஞ்சணத்தியோட இன்னொரு பெயர் நுணா. கிராமப்புறங்க‌ள்ல வாழுற மக்களுக்கு இது தெரிஞ்சிருக்கலாம். நான் சின்ன வயசுல இந்த மஞ்சணத்தி மரத்துல ஏறி விளையாடுவோம்.

 அதுல விளையுற காயை பறிச்சி ஒருத்தர் மேல ஒருத்தர் எறிஞ்சி விளையாடுவோம். அது பழமாயிட்டா கருப்பு நிறத்துல இருக்கும். நிறம் மட்டுமில்ல அதில இருந்து ஒருவித நாற்றம் வரும். எங்க ஊர்ல அதை கோழிப்பீ பழம்னு சொல்வோம்.

கோழியோட கழிவு மாதிரி இருக்கும், நாற்றமும்கூட அப்பிடித்தான் இருக்கும். அப்பிடி இருந்தாக்கூட நாங்க அதை சாப்பிடுவோம். கொஞ்சம்
புளிப்பு, கொஞ்சம் இனிப்பு சுவை இருக்கும். ஆனா இப்போ யார் அதை சீண்டுறாங்க, மரமே இல்லைங்கிறபோது காயா? பழமா? நுணாக்காயை ஊறுகா‌ய் செஞ்சி சாப்பிட்டா பொதுவா எல்லா நோயும் நீங்கி உடம்பு பலம் பெறும்.

நுணா இலைச்சாறு ஒரு பங்கு, உத்தாமணினு சொல்ற வேலிப்பருத்தி, நொச்சி, பொடுதலை இதுகளோட சாறு ஒரு பங்கு சேர்த்து 3, 4 வேளை கொடுத்துட்டு வந்தா எல்லாவிதமான மாந்தமும் ஓடிப்போயிரும்.

நுணாக்கா‌ய் & உப்பு சம அளவு எடுத்து அரைச்சி அடை மாதிரி தட்டி காய வச்சி அரைச்சு வச்சிக்கோங்க. இதை வச்சி பல் விளக்கிட்டு வந்தா பல்
பளிச்சினு இருக்கும்.

கூடவே பல்வலி, பல் அரணை வீக்கம், ரத்தக்கசிவு எல்லாம் ஓடிப்போயிரும். இதைவிட வேற பல்பொடி, பேஸ்ட் வேணுமா?